பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா ‘சந்திரமுகி 2’? வசூல் விவரம் இதோ!

சந்திரமுகி 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
சந்திரமுகி 2
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், மஹிமா நம்பியார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.
வரவேற்பு
மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த “சந்திரமுகி 2 ” திரைப்படம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் முதல் பாகம் அளவிற்கு இல்லாத காரணத்தால் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
வசூல்
சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தமாக 34 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழை போல தெலுங்கிலும் படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 28 கோடிகளும், வெளிநாடுகளில் 6 கோடி என உலகமுழுவதும் 34 கோடி வரை இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலே போட்ட பட்ஜெட்டை எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் படத்தினுடைய பட்ஜெட்டை கூட படம் எடுக்கவில்லை.
படத்தினுடைய பட்ஜெட்டை எடுக்க இன்னும் சந்திரமுகி 2 திரைப்படம் இன்னும் 26 கோடி வரை வசூல் செய்யவேண்டி இருக்கிறது. எனவே, வரும் நாட்களில் நன்றாக வசூல் செய்து படத்தினுடைய பட்ஜெட்டை எடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025