பிப்ரவரியில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம்.!

Dhruva Natchathiram - Madras HC

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017 ஆண்டுக  எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு இறுதியாக இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.

ஆனால் அன்றைய தினம் ரிலீஸாகும் என சியான் விக்ரம் ரசிகர்கள் மிகவம் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக மிண்டும் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது.

அதாவது, ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய, ரூ.2.4 கோடி ரூபாயை திரும்ப செலுத்தாததால் படத்தை வெளியிட இடைக்கால தடை கோரி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது.

அலங்காநல்லூர் – கீழக்கரை ஜல்லிக்கட்டு.! மதுரை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.!

அப்போது, துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம் என இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn