தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘Lets get married’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
தோனி தயாரிக்கும் முதல் திரைப்படம் :
கிரிக்கெட் வீரர் தோனி தனது “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” நிறுவனம் சார்பில் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதால் மூலம் சினிமாவில் தயாரிப்பாளாக அறிமுகமாகியுள்ளார். இவர் தயாரிக்கும் படத்திற்கு ‘Let’s get married’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை பிரபல இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
‘Let’s get married’ படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்
படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாணம், ஹீரோயினாக நடிகை இவானாவும் நடிக்கிறார்கள். அதைப்போல நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய், மோகன் வைத்தியா, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
‘Let’s get married’ படத்திற்கான பூஜை
இந்த நிலையில் தோனி தயாரிக்கும் இந்த ‘Let’s get married’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா,தோனி மனைவி சாக்ஷி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்கள்.
பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி, பர்ஸ்ட் லுக் போஸ்டர் என படத்திற்கான அப்டேட் வரிசையாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…