Dhivya Duraisamy : நடிகை திவ்யா துரைசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வேதனையாக இருந்தால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. இவருடைய புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவிய காரணத்தால் இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததற்கு அவருக்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து அவருக்கு ப்ளூ ஸ்டார் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த வெற்றிகளை எல்லாம் தொடர்ந்து அடுத்ததாக சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திவ்யா துரைசாமி தான் சோகமாக இருந்தால் என்ன செய்வார் என்பதனை பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரொம்பவே மனது வேதனையாக இருந்தது என்றால் நான் முதலில் டாட்டூ போட தான் போவேன். அப்படி இல்லை என்றால் முடி வெட்ட செல்வேன்.
இல்லை என்றால் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் எடுக்க செல்வேன். ஏனென்றால், இப்படியெல்லாம் எதாவது செய்தால் மட்டும் தான் நாம் வேதனை பட்ட விஷயங்களில் இருந்து நமது மனநிலையை மாற்றி வெளியே வரமுடியும். அப்படி முடி வெட்டியே பிறகு எல்லாம் என்னுடைய வேதனை எல்லாம் சென்ற பிறகு ஐயோ வெட்டி விட்டோமே என்று வேதனைப்படுவேன்” எனவும் நடிகை திவ்யா துரைசாமி கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க சொல்லுறது புதுசா இருக்கு என்பது போல கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…