‘மவனே யார் கிட்ட’ சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 முதல் பாடல் நாளை ரிலீஸ்!!!
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் மார்கெட்டில் உச்சத்தில் இருந்தவர் சந்தானம். இவருக்கும் அனைவருக்குமான கதாநாயகன் ஆசை துளிர்விட்டது. முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சக்கபோடு போடுராஜா என நடித்திஇருந்தார். அந்த படங்கள் ஓரளவு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
அதனை தொடர்ந்து விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு எனும் பேய் படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரேள்பை பெற்று வசூலும் ஈட்டியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தியும் ராம்பாலா இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான மவனே யார்கிட்ட எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU