போர் இறப்புக்கு நடுவே துப்பாக்கி ஏந்திய படி நடிகர் தனுஷின் புதுப்பட போஸ்டர்.!
தனுஷின் நடிப்பில் வெளிவரிருக்கும் பீரியட் ஆக்ஷன் படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப்பைக் கொண்டுள்ளது. தற்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
The Most awaited Arrival #CaptainMiller ????
Our #CaptainMillerFirstLook for you all ????@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @dhilipaction @siddnunidop @tuneyjohn pic.twitter.com/sCQyVnC1yE
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 30, 2023
போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, ஒரு பெரிய போர் நடந்திருப்பதும், அந்த போரின் இறுதியில் தனுஷ் வென்று நிற்பது போல் காட்சியளிக்கிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில், ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல மியூசிக் லேபிள் சரேகமா ஆடம்பரமான விலைக்கு கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஆனால், டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.