தனுஷுக்கு சினிமாவில் நடிக்கற ஆர்வம் சுத்தமாக இல்லை.! – கஸ்தூரி ராஜா பரபரப்பு.!
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் வெளியாக தயாராகவுள்ளது. இதில் திருச்சிற்றம்பல திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது.
இதனால் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களின் மூலம் காம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்தநிலையில் , நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் தனுஷ் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது ” சினிமாவில் நடிக்கற ஆர்வம் தனுஷுக்கு இல்லை.அடுத்தடுத்து 5 படங்கள் நடித்த பிறகும் கூட, அவர் சினிமாவைவிட்டு ஒருகால் வெளியவே வச்சிருந்தார்.
ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்ற அவரை கூப்பிட்டு ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு கூப்பிட்டு விட்டு வந்தேன். அதற்கு தனுஷ் இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்க?-ன்னு கத்தினார். ஒரு பொண்ணு கையை பிடிச்சுட்டு பீச்சுல நடந்து போகற சீன் எடுக்கும் போது தனுஷுக்கு கை, காலெல்லாம் வெடவெடன்னு நடுங்கியது.
விடுமுறை நாட்களில் ஆரம்பிச்ச படம் 60 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் ரெண்டு விடுமுறை நாட்கள் போனபிறகும் படப்பிடிப்பு முடியவில்லை. பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. தனுஷின் படிப்பு போச்சு. அவரை 12- ஆம் வகுப்பிலிருந்து இருந்து நானே இழுத்துட்டு வந்துட்டேன்.
தனுஷின் அக்காக்கள் 2 பேரும் டாக்டர்ஸ் அண்ணன் செல்வராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியர், இதனால் ஒரு பயத்திலேயே அவர் தன்னை தனாலேயே நடிப்பில ஈடுபடுத்திக்கிட்டாரான்னு கூட எனக்குத் சில நேரம் தோணும். சினிமாவுக்குள்ள அவர் ஈடுபாடு இல்லாமல்தான் வந்தார்” என பேசியுள்ளார்.