விடாமுயற்சியை கண்டு ஒதுங்கிய தனுஷ் படம்! புது ரிலீஸ் தேதி இது தான்!
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 21க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ” திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை நாங்கள் மாற்றம் செய்கிறோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.
நிறுவனம் கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி “நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் ” திரைப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6 ரிலீஸ் ஆகாது ரிலீஸ் தேதி பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என அறிவித்து இருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வதற்கு முக்கிய காரணமே அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் தான்.
விடாமுயற்சி படமும் பிப்ரவரி 6-ஆம் தேதி தான் வெளியாகும் என படத்தின் டிரைலரை வெளியீட்டு படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இதன் காரணமாக அந்த படத்துடன் நம்மளுடைய படத்தை இறக்கினால் சரியாக இருக்காது என்பதால் தனுஷ் இந்த முடிவை எடுத்திருக்கிறார். முக்கிய காரணமும் அதற்கு இருக்கிறது. இது தனுஷ் இயக்கும் படம் தான்.
அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை சிறிய சிறிய நடிகர்கள் தான் நடித்துள்ளார்கள். ஒரு வேலை தனுஷ் நடித்திருந்தால் கூட கண்டிப்பாக திட்டமிட்ட ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கி இருக்க மாட்டார். அதற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் அவர் இயக்கி நடித்துள்ள இட்லிகடை படம் பிப்ரவரி 10 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதைப்போல அதே தேதியில் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தனுஷ் திட்டமிட்டபடி அந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .