லண்டனில் தேசிய விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர்.!
கேப்டன் மில்லர் : நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘கேப்டன் மில்லர்’ கடந்த பொங்கல் பண்டிகையின் போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தற்போது, லண்டனில்நடைபெற்று வரும் இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த பெருமையைப் பெற்றுள்ளது.
ஆம், UK தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்காக உலகெங்கிலும் உள்ள ஏழு படங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட பிறகு, தனுஷ் நடித்த இந்த படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகார்பூர்வமாக தெரிவித்துள்ளது.
#captainmiller wins at UK … @dhanushkraja #arun @SathyaJyothi pic.twitter.com/Hjevy7DGRe
— G.V.Prakash Kumar (@gvprakash) July 4, 2024
அருண் மாதேஸ்வரன் இயக்கி எழுதிய இப்படம் பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பற்றிய கதையில் தனுஷ் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷ் தவிர, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நாசர், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.