கேப்டன் மில்லராய் போரில் வென்றாரா தணுஷ்.? திரை விமர்சனம் இதோ…

Captain Miller Review

நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

திரை விமர்சனம்:

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை தான் இந்த படத்தின் கதைக்களம். சுதந்திரதிற்கு முன் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர், அதே போல் இதில், ஆங்கிலேயர் படையின் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசைப்படுகிறார் படத்தின் நாயகன் (தனுஷ்) ஈஷா (கேப்டன் மில்லர்). ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து தனுஷின் அண்னன் (ராஜ்குமார்) போராடிக் கொண்டிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் உள்ள பழங்குடியினரின் காவல் தெய்வமாக கொரனார் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு இதே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கோயிலைக் கட்டினார்கள், ஆனால் அவர்கள் அந்த கோயில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஒரு பக்கம் வெள்ளைக்காரன் கொடுமை மறுபக்கம் ராஜா குடும்பம் தீண்டாமை என தன் மக்களை நடத்தும் விதத்தை சகித்து கொண்டு வாழும் தனுஷ், ஆங்கிலேயரின் படையில் சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என்று எண்ணி ராணுவத்தில் சேருகிறார். அதன் பின் அங்கு துப்பாக்கி சூடுதல் போன்ற விஷயங்களை கற்றுக்கொண்டு ஒரு சிறந்த வீர்ராக உருமாறி ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களை சுட்டு கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது.

இப்படி, கதாநாயகன் வாழ்வில் நடந்த சம்பவம் என்ன? கிராமத்தில் சுற்றி திரிந்தவன் திடீரென கேப்டன் மில்லராக மாறியது ஏன்? அவனை அப்படி மாற்றியது யார் என்பதற்கான விடைதான் கேப்டன் மில்லர் படத்தின் மீதி கதை.

பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்….

வழக்கம் போல் படத்தில் தனுஷ் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனுஷ் என்ட்ரி, இன்டர்வெல் பிளாக் என நிறைய அசர வைக்கும் காட்சிகள் உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் பிரம்மிப்பூட்டுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய துணையே BGM தான். ஆங்காங்கே சில காட்சிகள் மெதுவாக சென்றாலும், ஆக்ஷனை தாண்டி வலி நிறைந்த எமோஷனல் டிராமாவாக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அயலான் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

குறிப்பாக படத்தில் வரும் ஒவ்வொரு ஆக்சன் கட்சிகளும் வெறித்தனமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஹாலிவுட் ரேஞ்சில் சம்பவம் செய்துள்ளார் அருண்மா தேஷ்வரன். ஒரு பக்கம் தனுஷ் தீண்டாமை குறித்து பேசிய விஷயமும், வசனமும் சூப்பர் டூப்பர். மறுபக்கம், தனுஷுக்கு பக்கபலமாய் பிஜிஎம் போட்டுஅசத்தி இருக்கிறார் நம்ம ஜிவி பிரகாஷ். மொத்தத்தில் ஒரு முறை தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்