தனுஷின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களா?! மிரளும் கோலிவுட்!!!
இறைவி படத்தை முடித்ததும் தனது அடுத்த படம் தனுஷூடன் தான் என டிவிட்டரில் புகைப்படமெல்லாம் பகிர்ந்திருந்தார். ஆனால் அதற்கிடையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தனுஷிற்கு வடசென்னை படத்தின் வேலைகள் இருந்ததும் இவர்களது கூட்டணியை தள்ளிபோட்டது. தற்போது மீண்டும் அந்த படத்தை துவங்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படம் முழுக்க வெளிநாடுகளில் பிரமாண்டமாக படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தில் நடிக்க வைக்க ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
DINASUVADU