நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் செல்ல அய்யாவுவிடம் ஒரு கதையை நடிகர் தனுஷ் கேட்டாராம். செல்ல அய்யாவு விஸ்ணு விஷாலை வைத்து இயக்கி இருந்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு அருமையான கதையை செல்ல அய்யாவு தனுஷை சந்தித்து கதையையும் கூறினாராம். முதல் முறை கேட்டவுடன் தனுஷ் ஒரு கரெக்சன் சொன்னாராம், பிறகு அந்த கரெக்சனை சரி செய்துவிட்டு மீண்டும் தனுஷிடம் கதையை கூறும் போதும் தனுஷ் கரெக்சன் சொன்னாராம். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இப்படி கரெக்சன் சொல்லிக்கொண்டே தனுஷ் இருந்தாராம்.
ஓரு கட்டத்திற்கு மேல் சற்று கடுப்பான இயக்குனர் செல்ல அய்யாவு தனுஷிடம் கதையை கூறுவதை நிறுத்துவிட்டு அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம். தற்போது தனுஷை தொடர்ந்து நடிகர் சந்தானத்திடம் ஒரு கதையை அவர் கூறியிருக்கிறாராம். அவர் கூறிய அந்த கதை காமெடி கதைக்களத்தை வைத்து நகர்வதால் அது தனக்கு செட் ஆகும் என யோசித்து அதில் நடிக்கவும் சந்தானம் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
சந்தானம் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எனவே, அந்த படங்களை நடித்துமுடித்துவிட்டு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என செல்ல அய்யாவுவிடம் கூறிவிட்டாராம். இதனால் செல்ல அய்யாவும் சந்தனத்தை வைத்து இயக்கும் படத்திற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகவிருக்கிறதாம்.
ஏற்கனவே, செல்ல அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த சூழலில், அவர் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக வெளியான தகவல் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…