ராயனை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. ஓட்டம் பிடித்த தனுஷ்..! வைரல் வீடியோ…

ராயன் : நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. மேலும், ‘ராயன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
தனுஷின் புதிய வெளியீட்டை அனைத்து இடங்களிலும் உள்ள ரசிகர்கள் நன்றாக ரசித்து வருகின்றனர். இந்த படம் அவரது 50 வது படத்தைக் குறிக்கும் என்பதால், ரசிகர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
படம் முழுவதும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி இயக்குனராக கைத்தட்டலை அள்ளும் தனுஷ், நடிகராகவும் விருந்து படைத்துள்ளார். குறிப்பாக இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸ் வரவைக்கிறது. துஷாரா, சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கவனம் ஈர்க்க, ஏ.ஆர்.ரஹ்மான் BGM-மில் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் தனுஷ் ‘ராயன்’ FDFS-ஐ ரசிகர்களுடன் பார்த்துள்ளார், அவருடன் எஸ்.ஜெ சூர்யாவும் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். மேலும் ‘ராயன்’ திரையிடலின் போது, வீடியோவை தியேட்டர் நிர்வாகம் பகிர்ந்துள்ளது.
Celebrating a milestone! ???? @dhanushkraja marks his 50th film #Raayan with an amazing fan event at #FansFortRohini
Here’s to many more!#RaayanBlockbuster @arrahman @sunpictures @iam_SJSuryah @officialdushara @Aparnabala2 @sundeepkishan pic.twitter.com/IiqKOSTXe4
— Rohini SilverScreens (@RohiniSilverScr) July 26, 2024
படம் முடிந்த பிறகு, தனுஷ் வெளியே செல்லும் பொழுது, அவரே காண ரசிகர்கள் கூட்டமாக காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும், ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தனர். அப்பொழுது மாடி படியில் இருந்து தான் செல்லும் காருக்கு ஓட்டம் பிடித்தார். காரில் ஏறியதும் கும்பிடு போட்டுச்சென்ற தனுஷ். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராயன் FDFS பார்த்த தனுஷ்|ThiranpesiThagaval #raayan #dhanush #tamilnews #fdfs #arrahman #newmovie pic.twitter.com/Ycwrsaf3Y1
— Thiranpesi (@thiranpesi) July 26, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025