இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் முதன் முதலாக இயக்கிய அட்டகத்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் கபாலி படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இப்படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன் தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டியிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ் நன்றிகள். உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!’ என பதிவிட்டுள்ளார்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…