சினிமா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் ‘கேப்டன் மில்லர்’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக இருந்தது என்றே கூறலாம். அந்த அளவுக்கு படத்தின் டீசரில் வரும் காட்சிகள் நம்மளை பிரமிக்க வைத்தது.

டீசரை பார்த்த பலரும் படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். இதனையடுத்து, இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்னதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி கேபிட்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதற்கிடையில், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நேரு உள்  விளையாட்டு அரங்கில் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

6 mins ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

17 mins ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

1 hour ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

1 hour ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago