பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் ‘கேப்டன் மில்லர்’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக இருந்தது என்றே கூறலாம். அந்த அளவுக்கு படத்தின் டீசரில் வரும் காட்சிகள் நம்மளை பிரமிக்க வைத்தது.
டீசரை பார்த்த பலரும் படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். இதனையடுத்து, இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி கேபிட்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதற்கிடையில், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Our #CAPTAINMILLER is all set for a grand Release this PONGAL / SANKRANTI 2024 ????#CaptainMillerFromPongal#CaptainMillerFromSankranti @dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @SathyaJyothi pic.twitter.com/xE43r89EEQ
— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 8, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025