இது சரியா வராது என அண்ணன் படத்திலிருந்து ஒளிப்பதிவாளரை மாற்றிய தனுஷ்.!

நானே வருவேன் படத்தில் முதலில் யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை மாற்றிவிட்டு அரவிந்த் கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.
தனுஷ் நடிப்பில் தற்போது நானே வருவேன் திரைப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த படத்தில் இந்துஜா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு ஜீப்பை மையமாக கொண்டு தேஜாவு எனும் அமானுஷ்ய கதைக்களத்தை கொண்டு தயராகி வருகிறதாம். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
முதலில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னாமூர்த்தி எனும் பெண் ஒளிப்பதிவாளரை செல்வராகவன் பரிந்துரை செய்தாராம். செல்வராகவன் நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி தான். அப்போது அவரது வேலை பிடித்துப்போகவே நானே வருவேன் படத்திலும் கமிட் செய்ய நினைத்தாராம்.
ஆனால், தனுஷுக்கு என்னவோ சரியாக படவில்லையாம். அதனால் மீண்டும் புதுப்பேட்டை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவை நானே வருவேன் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக தற்போது ஒப்பந்தம் செய்துள்ளாராம். விரைவில் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025