தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த பிறகு வடசென்னை 2 படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
இதற்கிடையில், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் வடசென்னை 2 பற்றி பேசியுள்ளார்.
அட்லீயை எல்லோரும் கொண்டாடனும்! உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!
இது குறித்து பேசிய நடிகர் தனுஷ் ” வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் கண்டிப்பாக வரும். அதற்காக என்று தனி நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை உள்ளங்கள் கேட்கும்போது கண்டிப்பா அது நடக்கும் காத்திருங்கள்” என நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 26 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வடசென்னை முதல் பாகம் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…