வடசென்னை 2 நிச்சியம் வரும்! நடிகர் தனுஷ் பேச்சு!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த பிறகு வடசென்னை 2 படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையில், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் வடசென்னை 2 பற்றி பேசியுள்ளார்.

அட்லீயை எல்லோரும் கொண்டாடனும்! உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!

இது குறித்து பேசிய நடிகர் தனுஷ் ” வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் கண்டிப்பாக வரும். அதற்காக என்று தனி நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை உள்ளங்கள் கேட்கும்போது கண்டிப்பா அது நடக்கும் காத்திருங்கள்” என நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.  26 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வடசென்னை முதல் பாகம் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Bihar jewelry store robbery
MK Stalin Annamalai
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja