ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபுவின் “கூர்கா” படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.இவர் தற்போது உள்ள அனைத்து பிரபலங்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
இவர் தனது முக அமைப்பாலும் , நடிப்பாலும் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் வருடத்திற்கு 10 முதல் 20 படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஹீரோவாக யோகி பாபு களமிறங்கி உள்ளார்.இயக்குனர் ஷாம் அன்டன் தயாரிப்பில் , இயக்கத்தில் உருவாகி உள்ள “கூர்கா” திரைப்படத்தில் யோகி பாபு நடித்து உள்ளார்.இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளிட்டுள்ளார்.இப்படத்திற்கு ஷாம் அன்டன் இசையமைத்து உள்ளார்.
தற்போது இப்படத்தின் டீசர் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.