இசை வெளியீட்டு விழா : நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் “ராயன்” படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜூலை 26ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் 6ஆம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட நேரமாகும். வாத்தி திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு பின், தனுஷ் ராயன் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதையானது சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் பழிவாங்கும் கதை என்று சொல்லல்படுகிறது. தனுஷ் எழுதி இயக்கியுள்ள இப்படம், நடிகராக அவரது 50வது படமாகும். 2017ல் வெளியான பா.பாண்டி படத்துக்கு பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை ராயன் குறிக்கிறது.
இந்த படத்தில், தனுஷை தவிர பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், சுந்தீப் கிஷன், சரவணன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் உள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…