Raayan: நடிகர் தனுஷுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான யாத்ராவை சினிமாவில் அதுவும் தனது திரைப்படத்தில் களமிறக்கி உள்ளதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். தற்பொழுது, தனது மூன்றாவது இயக்கமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தை இயக்கி வருகிறார்.
காதல் கதையம்சத்தை கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த வாரம் முழுவதும் ‘ராயன்’ படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அப்டேட் குவிந்த வண்ணம் இருந்தது. அதன்படி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், பருத்தி வீரன் பட நடிகர் சரவணன் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் வரலட்சுமி சரத்குமார் என இதுவரை இல்லாத மிரட்டும் பட்டாளமே நடித்துள்ளது.
அறிவிப்பின்படி, அவர்களது கதாபாத்திரம் ப்ளாக் அண்ட் வைட் ஆக மிரட்டும் வகையில் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படி ஒட்டு வித்யாசமான காம்போவாக இருக்க, இந்த படத்தில் மேலும் லிட்டில் நட்சத்திரம் இணைந்துள்ளதாக ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது.
அதாவது, தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுக்கு நடிப்பின் மீது ஆசை இல்லாததால், படத்தை ஒளிப்பதிவு செய்யும் போஷனை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க… ராயன் படத்தை யாத்ரா ஷூட் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. யாத்ராவுக்கு 17 வயது தான் ஆகிறது, பள்ளியில் 11 அல்லது 12ம் வகுப்பு படித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல், ராயன் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு உதவியாக பணி புரிந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி எது என்னவோ படம் வெளியாகும் பொழுது இதற்கான விடை தெரிந்து விடும்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…