அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை, முன்னிட்டு, நேற்று அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்காக இந்த படம் திரையிடப்பட்டது. திரையிடல் நிகழ்வுக்கு பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் தங்களது பதில்களை அளித்தனர்.
அப்போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று தனுஷிடம் கேள்விகேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த தனுஷ் ” எப்படி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று எனக்கு தெரியவில்லை. நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் நிறுவனம் என்னை அழைத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இது மிகப்பெரிய பெரிய படம் என்றனர். எந்த படம், என்ன படம் யார் இயக்குனர் நான் கேள்வி எழுப்பியபோது, அதனை சொல்வதற்கு முதலில் உங்கள் அனுமதி வேண்டும் என்றனர். பிறகு அவர்கள் சொன்னபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது” என மிகவும் கலகலப்பாக தனது பாணியில் பேசியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த ஹாலிவுட் நடிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…