துணிவு இயக்குனருடன் இணையும் தனுஷ்….எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கூட்டணி.!
நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதற்கான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், வலிமை ஆகிய தரமான படங்களை கொடுத்த இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் குட்டி அர்ச்சனா…வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.!
இயக்குனர் எச்.வினோத் தற்போது அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்திற்கான வேலைகளை தொடங்குவார் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.