அந்த நடிகையை வைத்து படம் இயக்கப் போகும் தனுஷ்! உண்மையை உளறிய பிரகாஷ் ராஜ்!

prakash raj Dhanush

ராயன் : நடிகராக கலக்கி கொண்டு இருக்கும் தனுஷ் மற்றோரு பக்கம் இயக்குனராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அவர் நடிகராக தன்னுடைய 50-வது படத்தினை அவரே இயக்கி அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். படத்தில் அவருடன் பிரகாஷ் ராஜ், காளிதாஸ், சந்தீப், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜீலை 26-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ராயன் படத்தினை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கி வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இன்னும் ஒரு படத்தையும் தனுஷ் இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை பிரகாஷ் ராஜ் ராயன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” தனுஷ் என்னையும் நடிகை நித்யா மேனனை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான கதையை  பற்றி என்னிடமும்  நித்யாவிடமும் பேசினார். ரொம்ப நன்றாக இருந்தது” என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏற்கனவே, நடிகை நித்யா மேனன் தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து இருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவரை வைத்து தனுஷ் ஒரு படத்தினை இயக்கவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்