நான் கஷ்டப்படாத அளவுக்கு தனுஷ் உதவினார்…நன்றி தெரிவித்த பொன்னம்பலம்.!
தமிழ் திரையுலகில் 90″s காலகட்டத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம். கடந்த சில ஆண்டுகளாகவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பொன்னம்பலம் கடைசியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் சில நாட்களிலே வெளியேற்றப்பட்டார்.
மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பொன்னம்பலம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் என்றே கூறலாம்.பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார்.
அவருடைய சிகிச்சைக்காக சரத்குமார், தனுஷ் என உள்ளிட்ட பல நடிகர்கள் பணம் கொடுத்து உதவி செய்திருந்தார்கள். இதனையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பொன்னம்பலம் “நான் கஷ்டப்படாத அளவுக்கு தனுஷ் உதவினார் என பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய பொன்னம்பலம் ” ‘நான் தனுஷுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே எனக்கு பணம் அனுப்பினார். நான் நினைத்ததைவிட பத்து மடங்கு அதிக பணம் அனுப்பி, நான் கஷ்டப்படாதவாறு பார்த்துக்கொண்ட தனுஷுக்கு நன்றி’ என கூறியுள்ளார்.