நயன்தாராவை தனுஷ் துன்புறுத்தினார்! சுசித்ரா சொன்ன பகீர் தகவல்!

விரைவில் நயன் லீக்ஸ் வெளியாகும் என பாடகி சுசித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

dhanush nayanthara Suchitra

சென்னை : ஆரம்பக் காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது ஏற்பட்ட பிரச்சினை திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்று நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு தான் இந்த பிரச்சினை தொடங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

இவர்களுடைய பிரச்சினை சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தனுஷ் பிரச்சினை வந்தாலே அவரை விமர்சித்துப் பேசி வரும் பாடகி சுசித்ரா நயன்தாரா பிரச்சினையில் தனுசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது “தனுஷ் நயன்தாராவுக்கு இந்த விஷயத்தில் மட்டும் தான் பிரச்சினை கொடுத்திருக்கிறார்? என்று நினைக்கிறீர்கள்? யாரடி நீ மோகினி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் தனிப்பட்ட முறையில் நயன்தாராவுக்குத் தொல்லை கொடுத்துள்ளார்.

படிப்பிப்பு தளத்தில் அவருக்குப் பலமுறை ரூட் விட்டு இருக்கிறார். அவர் சாதாரணமாக தனுஷிற்கு ஹாய் சொன்னால் கூட அவரை காதலிப்பதாகவும் தனுஷ் நினைத்துக்கொள்வார். என்னைப் பொறுத்தவரை தனுஷ் ஒரு சைக்கோ. நயன்தாரா மட்டுமின்றி பல நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கமுடியவில்லை என்றால் தொழில் ரீதியாகத் தொல்லை கொடுப்பார். தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் மட்டுமில்லை, அம்மாவாக நடித்த நடிகைகளுக்குக் கூட தொல்லை கொடுப்பார். அந்த அளவுக்கு மோசமான ஒரு மனிதர் தான் தனுஷ்.

இந்த பிரச்சினையில் வெளிப்படையாக நயன்தாரா பேசியிருப்பது பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். அவர் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துவிட்டார். ஆனாலும், இந்த பிரச்சினையில் தனுஷ் கண்டிப்பாக சும்மாக இருக்கமாட்டார். தனியாக ஆள் வைத்து நயன் லீக் என்ற பெயரில் சில வீடியோக்களை வெளியிடச் சொல்லுவார்” எனவும் பாடகி சுசித்ரா வெளிப்படையாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu