நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தற்பொழுது, தான் இயக்கி நடித்து வந்த 50-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவர் பாண்டி படத்தைத் தொடர்ந்து, இது தனுஷ் இயக்கும் 2ஆவது படம் ஆகும். இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.
D50-ஐ தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் தனுஷ்! இசையமைக்க போவது யார் தெரியுமா?
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், “ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் தனக்கு உறுதுணையாக இருந்த கலாநிதி மாறன் சார் மற்றும் சன் பிக்சர்ஸ் அவர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தின் அப்டேட் குறித்த ரத்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டை போட்டுகொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் என்று மட்டும் தெரிய வந்தது. அதுவும் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியான பிறகே தெரிந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சைலண்டாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…