நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான இரண்டு படங்களும் சரியாக போகாத காரணத்தால், இந்த திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஆவலுடன் காத்துள்ளனர்.
ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…