ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.!
இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருந்ததால் மீண்டும் இப்படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இதனையடுத்து படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்களுகளில் வெளியாகிறது. இதனை தனுஷ் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் “ஐங்கரன் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய நேர்மறையான விமர்சனங்களைக் கேட்கிறேன். நல்ல அதிர்ஷ்டம் வாழ்த்துக்கள் ஜிவிபிரகாஷ்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
#ayngaran releases in theatres on MAY 12th . Hearing a lot of positive reviews . Best of luck @gvprakash god bless. pic.twitter.com/1RTfmYp07e
— Dhanush (@dhanushkraja) May 7, 2022