“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் -தனுஷ் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை தாண்டி அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் இருக்கிறது. அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருப்பார்கள். இது புரியாமல் ரசிகர்கள் தான் மாறி மாறி தங்களுடைய நடிகர் தான் பெரிய ஆள் எனச் சண்டைபோட்டுக் கொண்டு வருகிறார்கள்.
அப்படி தான் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தீ பிடிக்கும் அளவுக்கு தனுஷ் – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் பேசும்போது நான் யாரையும் வளர்த்துவிட்டேன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால், என்னை அப்படிச் சொல்லித் தான் இப்படி ஆக்கிவிட்டார்கள்” என்பது போலப் பேசினார்.
இதனைப் பார்த்த பலரும் தனுஷை தான் மறைமுகமாக இவர் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார் எனக் கூறி வந்தனர். இதன் காரணமாக தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் பேசிக்கூடக் கொள்ளவில்லை எனவும் தகவலைப் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இதெல்லாம் சும்மா பரவும் தகவல் என்பது போலச் சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள்.
கலந்துகொண்டது மட்டுமின்றி இருவரும் சந்தித்துக் கட்டியணைத்து நலம் விசாரித்துக்கொண்டார்கள். அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது இவர்களுக்குள் சண்டையா? சும்மா இருங்கப்பா எப்படி பழகுகிறார்கள் பாருங்கள் என்பது போல எண்ணத்தைக் கொண்டு வந்தது. இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாக பரவிய நிலையில், இப்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அது என்ன வீடியோ என்றால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து நடனம் ஆடிய வீடியோ தான். திருமண விழாவில் தனுஷின் வாட் எ கருவாடு பாடலுக்கு இருவரும் சேர்ந்து வைப் செய்தனர். வீடியோ வைரலாகி வரும் நிலையில், இருவரும் எப்போதும் நல்ல நண்பர்கள் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
D and SK dancing together 🫰 pic.twitter.com/ByFu1Wl2Eu
— Siddarth Srinivas (@sidhuwrites) November 24, 2024