captain miller pongal [File Image]
நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எல்லாம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அப்படி அவருடைய படங்கள் 6 முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கும் நிலையில், 7-வது படமாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனுஷ் படங்கள் என்னென்ன என்பதனை பற்றி பார்க்கலாம்.
இதுவரை தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தை சேர்க்காமல் 6 படங்கள் வெளியாகி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்திருக்கும் நிலையில், 7-வது படமாக கேப்டன் மில்லர் படம் வெளியாகும் காரணத்தால் இந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெரும் என அவரும் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த முறை வரும் 2024-பொங்கல் பண்டிகை மிகவும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் படம் மட்டும் வெளியாகவில்லை ரஜினி சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால்சலாம், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் ஆகிய படங்களும் வெளியாகிறது.
எனவே, இந்த படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனுஷ் படங்கள் எல்லாம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அவருக்கு பொங்கல் மிகவும் ராசியாக அமைந்திருக்கிறது. எனவே, இந்த முறை அவருடைய கேப்டன் மில்லர் படம் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…