மீண்டும் கேங்ஸ்டராக களமிறங்கும் தனுஷ்.! அதுவும் 1950’s காலகட்டத்தில்.!
ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படும் திரைப்படம் 1950 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாம்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் அவரது திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், OTTயில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிவிட்டது.
மீண்டும் OTTயில் வரும் கிறிஸ்த்மஸ் தினத்தை முன்னிட்டு கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே ) எனும் ஹிந்தி படம் தமிழில் டப் ஆகி வெளியாகவுள்ளது.
அடுத்ததாக நானே வருவேன் , தி க்ரே மென் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதனை அடுத்து, ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாம்.
அதுவும், 1950 காலகட்டத்தில் நடக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம். விரைவில் இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..