Categories: சினிமா

தனலட்சுமி சொன்ன ‘அந்த’ வார்த்தை….கண் கலங்கி அழுத ஜிபி முத்து.! வைரலாகும் வீடியோ…

Published by
பால முருகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவும் கலந்துகொண்டுள்ளதால் பலரும் இதனை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவருக்கென்று தனி ஆர்மியே உருவாகிவிட்டது என்றே கூறலாம்.

GP Muthu
GP Muthu [Image Source: Twitter]

இந்த நிலையில், ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த போட்டியாளருக்கு மத்தியில் மெல்ல மெல்ல சண்டைகள் வரத்தொடங்கியுள்ளது. ஆம், ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். இதில் ஜனனியால் ஆயிஷா நாமினேட் செய்யப்பட்டு வீட்டின் வெளியில் உள்ள பெட்டில் தான் தூங்க வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்களேன்- ஐ லவ் யு சார்.. என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா.? அமிதாபை அதிர வைத்த கேரளத்து முன்னணி நடிகை.!

GP Muthu Crying [Image Source: Twitter]

இதையடுத்து, நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில்  ஜிபி முத்துவை ஆயிஷா, நாமினேட் செய்துள்ளார். ஏனெனில், ஜி.பி.முத்து இந்த அணி, அந்த அணி என வேறுபாடு பார்க்காமல் சகஜமாக உதவிகளை செய்து வருகிறார். இது அவருடைய சொந்த அணியினருக்கே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

GP Muthu Crying [Image Source: Twitter]

இதனால், ஜிபி முத்து பிற அணியினருக்கும் வேலை செய்கிறார் என அவருடைய அணியில் இருப்பவர்கள் கூறி அவரை நாமினேட் செய்துள்ளார்கள். இப்படி சொன்னதால் கடுப்பான ஜிபி முத்து வெளியில் அமர்ந்து சக ஆண் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அங்கு வந்து தனலட்சுமி நீங்க நடிக்கிறீங்க என்று கூறுகிறார். இது ஜிபிமுத்துவை பெரிதும் பாதிக்க சாப்பிடும் மேஜையில் கண்ணீர் விட்டு அழுகிறார். பிறகு அங்கிருந்த சக ஹவுஸ்மேட்ஸ் ஆறுதல் கூறுகிறார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ஜிபி முத்து ஆர்மி தனலட்சுமி மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

7 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

7 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

7 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago