சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தட்டி சென்ற தேவிஸ்ரீ பிரசாத்!
சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல ‘கருவறை’ என்ற Non Features திரைப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, புஷ்பா படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தேவி ஸ்ரீ பிரசாதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களை பற்றி சொல்லியே தெரியவேண்டாம் அந்த அளவிற்கு ஒரு தரமான பாடல்களை கொடுத்திருந்தார். அந்த பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாதுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.