சரிவை கண்ட ‘தேவாரா’! 4-வது நாள் வசூல் விவரம் இதோ!

300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தேவாரா திரைப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் 350 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

devara

சென்னை : தேவாரா திரைப்படத்திற்கு தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், படம் கடந்த செப் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ஒரு பக்கம் தெலுங்கில் கவலையான விமர்சனம் கிடைத்து வந்த நிலையில், மற்றோரு பக்கம் தமிழில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது.

விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் கூட, வசூல் ரீதியாக படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், படம் வெளியான முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் 170 கோடி வரை வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரே நாளில் உலகம் முழுவதும் 170 கோடி வசூல் செய்வது என்பது எல்லாம் சாதாரண விஷயமா? என்டிஆர் மார்க்கெட் பெரிதாக இருப்பதன் காரணமாக தான் அந்த அளவுக்கு, ஓப்பனிங் கிடைத்துள்ளது. முதல் நாளை தொடர்ந்து அடுத்த இரண்டு, நாட்களிலும் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அதாவது, வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 302 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வெளியான 4 நாட்களில் எவ்வளவு கோடி வசூலை செய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம்,  உலகம் முழுவதும் 350 கோடி வரை வசூல் செய்து படத்தின் பட்ஜெட் தொகையை மீட்டெடுத்துள்ளது.

தெலுங்கில் ரூ.136.5 கோடியும், ஹிந்தியில் ரூ.31 கோடியும், தமிழில் ரூ.3.45 கோடியும் வசூலித்துள்ளது. படத்தின் கன்னட பதிப்பு ரூ 1.15 கோடி வசூலித்தது, அதே சமயம், மலையாளப் பதிப்பு ரூ 1 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தேவாரா படம் இந்தியாவில் மட்டும் தொடக்க நாளில் ரூ 82.5 கோடி வசூலித்தது, 2-வது நாளில் ரூ 38.2 கோடி வசூலித்தது, அதன் பிறகு படம் சற்று மீண்டு அதன் 3 நாளில் ரூ 39.9 கோடி வசூலித்தது. அதன் பிறகு 4-வது நாளாக வசூல் குறைந்துள்ளது. அதாவது, திங்கட்கிழமை, படம் 68.67 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.  ஏனெனில், 4-வது நாளில் மட்டும் ரூ.12.5 கோடி மட்டுமே வசூலிக்க முடிந்தது. இதன் மூலம், இந்திய பாக்ஸ் ஆபிஸில் படம் மொத்தமாக ரூ.173.1 கோடி வசூல் செய்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்