கோட் வசூலை முறியடிக்குமா தேவாரா? 5 நாட்களில் இவ்வளவு கோடிகளா?
கோட் படத்தின் மொத்த வசூலை தேவாரா திரைப்படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் விஜய் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்வது போலத் தெலுங்கு சினிமாவில் ஜீனியர் என்டிஆர் படங்கள் வசூல் ரீதியாக சாதனைகளைப் படைத்தது வருகிறது. அதற்கு உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் அவருடைய நடிப்பில் வெளியாகி முதல் நாள் வசூலில் அதிர வைத்த தேவாரா படத்தினை சொல்லலாம்.
தேவாரா படம் வெளியான முதல் நாளில், உலகம் முழுவதும் 170 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல, விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் வெளியான முதல் நாளில் 120 கோடி வரை வசூல் செய்திருந்தது. முதல் நாள் வசூலில் தேவாரா படம் அதிக வசூல் செய்தாலும் கோட் படத்தின் மொத்த வசூலை முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது.
கோட் படம் இதுவரை 460 கோடிகள் வசூலைக் கடந்து இன்னும் ஒரு சில திரையரங்குகளில், மட்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே சமயம், தேவாரா திரைப்படம் வெளியாகி 1 வாரங்கள் கூட ஆகவில்லை எனவே, கோட் படத்தின் வசூலை முறியடிக்க தேவாரா படத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
தேவாரா படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 340 கோடி வரை வசூல் செய்து படத்தின் பட்ஜெட் பணத்தை மீட்டெடுத்து தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 360 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடக்கத்தில் படத்திற்கு வசூல் ரீதியாக, நல்ல ஓப்பனிங் கிடைத்து வந்த நிலையில், நாட்கள் ஆக ஆகப் படத்தின் வசூல் குறைந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் தான். இருப்பினும், பட்ஜெட் தொகையைக் கடந்து விட்டதால் படம் ஹிட் படம் என்று கூறப்படுகிறது. மொத்தமாகப் படம் எவ்வளவு கோடி வசூல் செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.