சிறகடிக்க ஆசை சீரியல்.. பயத்தால் மனோஜ் செய்த காரியம்..!!

சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஜூலை 29]எபிசோடை காணலாம் .
பாட்டி சுருதி கிட்ட பழைய போட்டோவ காட்டிட்டு இருக்காங்க.. பாட்டி நீங்க சின்ன வயசுல இவ்வளவு அழகாய் இருந்துருக்கீங்களே ..அப்போ உங்களுக்கு நிறைய ப்ரொபோஸ் எல்லாம் வந்து இருக்கும் . இது யாரு பாட்டி இது ரவிதமா அப்படின்னு சொல்றாங்க .ரவியை பார்த்து சுருதி கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ கோவிலுக்கு போயிட்டு அண்ணாமலை விஜயா எல்லாரும் வராங்க. அண்ணாமலை விஜயா கிட்ட கொஞ்சம் தண்ணி குடு அப்படின்னு கேக்குறாங்க.. பாட்டி உங்க பிளான் சூப்பரா வேலை செய்து அப்படின்னு முத்து சொல்றாரு. இப்படி சொல்லிக்கிட்டே அண்ணாமலையோட கழுத்தை பாக்கறாங்க.
கழுத்துல போட்டு ஒட்டி இருக்கு அப்பா இருப்பா உனக்கு கழுத்துல பெரிய மச்சம் மாதிரி இருக்குன்னு முத்து சொல்றாரு. அதுக்கு பாட்டி அது மச்சம் இல்ல ஏதோ பொட்டு மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றாங்க. இப்ப விஜயாவோட நெத்தியில பொட்டு இருக்காது இத பாத்துட்டு எல்லாருமே சிரிக்கிறாங்க.. அத புரிஞ்சுகிட்டு அண்ணாமலை இவன் கார் ஓட்ட தெரியாம ஓட்டுனா அதனால விஜயா என் மேல சாஞ்சுட்டா அப்போ ஒட்டி இருக்கும் அப்படின்னு சொல்றாரு.. இப்ப பாட்டி சொல்றாங்க இப்பதான் என் மனசு நிம்மதியா இருக்கு. ரவியும் சுருதியும் ரூம்ல பேசிட்டு இருக்காங்க ரவி சொல்றாரு நமக்குன்னு ஒரு பாப்பா வேணும் அப்படின்னு அதுக்கு ஸ்ருதி சொல்றாங்க ரெடி பண்ணிக்கலாம்.
என்ன ஸ்ருதி இவ்வளவு அசால்ட்டா சொல்ற அப்படின்னு ரவி கேட்கிறார். இப்பல்லாம் எல்லாம் செலிபிரிட்டியும் சரகசி[வாடகை தாய் ] மூலமா தான் குழந்தை பெத்துக்கறாங்க. நாமளும் அது மாதிரி பண்ணிக்கலாம் அதுக்கு உண்டான பணத்தையும் கொடுத்துவிடலாம் அப்படின்னு சொல்றாங்க. ரவி இத கேட்டு வாய் அடைச்சு போய் இருக்காரு. இப்போ மனோஜ் விஜயா கிட்ட அந்த லெட்டர் விஷயத்தை சொல்றாரு சுத்தி இருக்கிறவங்களால எனக்கு ஏதோ பிரச்சனை வரப்போகுது அப்படின்னு ஒருத்தன் வந்து லெட்டர் குடுத்துட்டு போனா எனக்கு பயமா இருக்குதுமானு சொல்றாரு.
இப்ப விஜயா கேக்குறாங்க என்ன புதுசா ஐடியா பண்றியா மாசம் அம்பதாயிரம் கொடுக்காமல் இருக்கறதுக்கு. உடனே மனோஜ் நான் அப்படி பண்ணுவேன அம்மா.. டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா அப்படின்னு சொல்றாங்க. உங்களால தான் எனக்கு பிரச்சனை வரப்போகுதுனு தோணுது . உடனே விஜயாவுக்கு கோவம் வந்து மனோஜ அடி அடின்னு அடிக்கிறாங்க உன்னால தாண்ட எனக்கு எவ்வளவு பிரச்சினையும் சொல்லியே அடிக்கிறாங்க.. காலையில விடிஞ்சதும் முத்துவோட ஃப்ரெண்ட் வராரு அண்ணாமலை பாத்துட்டு நீ முத்துவோட பிரண்டு தானேப்பா அப்படின்னு சொல்றாங்க. முத்துவும் வாடா கார்த்தி அப்படின்னு சொல்றாரு. அப்பா நம்ம ரெண்டாவது வாங்குன காரை இவன் தான் ஓட்ட போறான் அப்படின்னு சொல்றாங்க..
மீனா அந்த சாவி எடுத்துட்டு வா .. அண்ணாமலை கையில் கொடுக்க சொல்றாங்க. இப்ப அண்ணாமலை ஆசிர்வாதம் பண்ணி அந்த சாவியை குடுக்குறாங்க .இரண்டு பேரும் சேர்ந்து முன்னுக்கு வரணும் அப்படின்னு. அப்பா கையால சாவி வாங்கி இருக்கா டா நீ சொந்தமாக சீக்கிரமாக கார் வாங்கி ஓட்டணும் அப்படின்னு சொல்றாரு. நல்லது நடந்தா சந்தோசம் தான் டா அப்படின்னு அவங்க பிரண்டு சொல்கிறார். இப்ப மீனா சொல்றாங்க.. உங்க பிரண்ட்ஷிப் வேற தொழில் வேற அண்ணா அதனால நீங்க பார்த்து கார் ஓட்டணும் கார் ஓட்டும்போது எந்த கெட்ட பழக்கமும் வச்சுக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க .சரியா சொன்ன மீனான்னு அண்ணாமலை சொல்றாரு அதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது.
நாளைக்கு ப்ரோமோல முத்துவும் மீனாவும் உண்டியல் எடுத்துட்டு வராங்க அதைப் பார்த்த விஜயா என்ன இதுல பிச்சை எடுத்து வீடு கட்ட போறீங்களா அப்படின்னு நக்கலா கேக்குறாங்க அந்த டைம்ல வெளியில இருந்து மனோஜ் பட்டையோட அம்மா அப்படின்னு சவுண்டோட வர்றாரு. அதைப் பார்த்த முத்து அப்பா அம்மா கரெக்டா சொல்லி இருக்காங்க இதோ பிச்சைக்காரன் வந்துட்டான் .. என்ன நடந்திருக்கணும் நாளைக்கு ஆனா எபிசோடில் பார்க்கலாம். காத்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025