சிறகடிக்க ஆசை சீரியல் -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய விருவிருப்பான காட்சிகளை இங்கே காணலாம்.
மீனா கிட்ட தப்பிச்சு கறி கடை மணி மனோஜோட கடைக்கு போறாரு .மனோஜ் அப்பதான் டீலரை பார்க்க போறேன்னு கிளம்பிடுகிறார். இப்போ வித்யாவும் ரோஹினியும் கறி கடை மணியை பார்த்துட்டு ஷாக் ஆயிடறாங்க. கறி கடை மணியும் அந்த பூக்கற்ற பாப்பா என்னைய பார்த்துருச்சு நான் தப்பிச்சு வந்துட்டேன் அப்படின்னு ரோகினி கிட்ட சொல்றாரு .
இதை கேட்ட ரோகிணி ஷாக் ஆயிட்டாங்க நான் வேற அவளை பூ கொண்டு வர சொல்லிட்டேனே அப்படின்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மீனாவும் வந்துடறாங்க. இப்போ வித்யா மணியை கூப்பிட்டு ஒளிஞ்சிக்கிறாங்க. மீனா பூவ குடுத்துட்டு உங்க மாமாவை நான் பார்த்தே ரோகிணி அப்படின்னு சொல்றாங்க.
அவர்தான் ஊர்ல இருக்கிறாரே நீங்க வேற யாரையாச்சும் பார்த்திருப்பீங்க அப்படின்னு சொல்லி ரோகினி சமாளிக்கிறாங்க.. இப்போ மனோஜும் டீலர் பாத்துட்டு வந்துடறாங்க. கூடவே செல்வமும் முத்துவும் ப்ரிட்ஜ் வாங்க வர்றாங்க. முத்து மீனாவ பாத்துட்டு நீ என்ன இங்க இருக்குற அப்படின்னு கேக்குறாரு.. அதுக்கு மீனா ரோகிணி கடைக்கு பூ கொடுக்க வந்தேன் அப்படிங்கிறாங்க.
இப்போ மனோஜ் கிட்ட முத்து சொல்றாங்க செல்வத்துக்கு பிரிட்ஜ் எடுக்கணும் அப்படின்னு சொல்றாரு. மனோஜ் உடனே ஸ்டாப் யாராவது வர சொல்றேன் அப்படின்னு சொல்றாரு. உடனே முத்து சொல்றாரு டேய் நீயே வாடா அப்படிங்கிராரு.. வா மீனா நல்ல பிரிஜா பார்த்து எடுத்து கொடு அப்படின்னு சொல்றாரு.
வித்யா மணிய பிரிட்ஜ் குள்ள ஒளிச்சு வச்சுருக்காங்க. செல்வம் எல்லா ப்ரிட்ஜையும் பாக்குறாரு.. எல்லாமே ரேட் அதிகமா இருக்குன்னு சொல்லிட்டு முத்து கிட்ட சொல்றாரு. அப்புறம் கரெக்டா அந்த மணி ஒளிஞ்சிட்டு இருக்குற பிரிட்ஜ் பாத்துட்டு இது நல்லா இருக்கு அப்படின்னு சொல்றாரு .
முத்துவும் அந்த ப்ரிட்ஜ் பக்கத்துல போறாங்க.. வித்யா ரோகிணிகிட்ட சொல்றாங்க மணிய அந்த பிரிட்ஜ்ல தான் ஒளிச்சு வச்சிருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு போய் தடுத்து நிறுத்துறாங்க .அப்போ ரோகினி சொல்றாங்க அது வித்யா வாங்க போறா.. முத்து சொல்றாரு இல்ல இது செல்வம் எடுத்துக்குவான் மாசம் கட்டிருவான் அப்படின்னு சொல்லவும் ரோகினி சொல்ராங்க வித்யா ரெடி காஸ் கொடுத்து வாங்குறாங்க .
உடனே மனோஜ் சொல்றாரு வித்யாவே இதை எடுத்துக்காட்டும் சொல்லிடுறாரு. இப்போ மீனாவும் செல்வமும் வா முத்து நம்ம வேற கடையில வாங்கிக்கலாம் சொல்லிட்டு கிளம்பிடுராங்க. இப்போ வித்யா பிரிட்ஜில் இருந்து மணியை திறந்து விடறாங்க. அவரும் உள்ள ரொம்ப வேர்த்துருச்சுனு சொல்லிட்டு என்கிட்ட நீங்க சினிமாவுல சான்ஸ் வாங்கி தரேன்னு சும்மாதான் சொல்லி இருக்கீங்க .
ரோகிணி பாப்பா உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு, அது எனக்கு தெரியும் அப்படின்னு சொல்றாரு. என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது அப்படின்னு ரோகிணி கிட்ட சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டாரு. அதோட இன்னைக்கு ஒரு எபிசோடு முடிந்தது.
நாளைக்கான ப்ரோமோல மீனா முத்து கிட்ட பேசிட்டு இருக்காங்க.. ரோகினி ஓட மாமாவ நான் பார்த்தேன் அப்படின்னு சொல்றாங்க அவரு இங்கதான் இருக்கிறார். உடனே முத்துவும் சொல்றாரு எனக்கும் அந்த ரோகினி மேல ஒரு டவுட் இருக்கு அப்படின்னு சொல்றாரு .இத ரோகிணி ஒட்டு கேட்டு இருக்காங்க. நாளைக்கு எபிசோட் எப்படி இருக்குன்னு பாப்போம்.
சிறகடிக்க ஆசை இன்று.. ரோகினியின் உண்மை முகத்தை அறிந்த ப்ரௌன் மணி
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…