இன்று அதிகாலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல்
தமிழில் சிந்து சமவெளி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஹரிஷ் கல்யாண் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவர் கடந்த ஆயுத பூஜை தினத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அறிக்கையின் மூலம் வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார்
அந்த அறிக்கையில் ” என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.
என்னுடைய ரசிகர்கள் மற்றும் உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என தன்னுடைய திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- நான் அவர்களுக்காக தான் அந்த மாதிரி வீடியோ போடுகிறேன்.! சாக்ஷி அகர்வால் வெளிப்படை விளக்கம்.!
இதனை தொடர்ந்து, இன்று 28.10.2020 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா உதயகுமாருக்கும் பெற்றோர்களின் முன்னிலையில், கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும், திருமணத்தின்போது எடுக்கப்பட் அழகான அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…