சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை இழந்த இளம் இயக்குனர்?!
தேசிங்கு பெரியசாமி கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் படமெடுக்க தயாரிப்பு தரப்பு முன்வராத காரணத்தால் அந்த படம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியில் சறுக்கல்களை சந்தித்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்கிற எண்ணம் ரசிர்கள் மனதில் தோன்றியது. அதில் ஆரம்பம் முதல் கிசுகிசுக்கப்பட்டவர் தேசிங்கு பெரியசாமி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் இளமை ததும்பும் ஹிட் படத்தை கொடுத்தவர் ரஜினிக்கு கதை கூறி ரஜினியிடம் ஓகே வாங்கி வைத்திருந்தார்.
ஆனால், ஒரு படம் மட்டுமே இயக்கிய இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் ரஜினியை வைத்து படம் இயக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஏதேனும் சொதப்பிவிட்டால் பெரும் சிக்கலாகி விடும் என தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டதாம்.
ஆதலால், அந்த இயக்குனர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினி மீண்டும் பேட்ட எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.