பயத்தை காட்டிட்டாங்க! டிமான்டி காலனி 2 திகில் விமர்சனம்!

Demonte Colony2 Twitter Review

சென்னை : டிமான்டி காலனி 2  படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் மிரண்டு போய் படம் ‘பயங்கரமாக’ இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் மக்களுக்கு எந்த அளவு பயத்தை காட்டியது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே திகில் குறையாத வகையில், இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சிஎஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகும்போதே படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எனவே, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான டிமான்ட்டி காலனி 2  நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்த்த நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் ” டிமான்டி காலனி 1 மற்றும் டிமான்டி காலனி 2 இடையே 9 வருட இடைவெளி உள்ளது, எந்த பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை மற்றும் பகுதி-1 ஐ விட மிகவும் சுவாரஸ்யமான பகுதி-2 உருவாக்கப்பட்டது” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” டிமான்டி காலனி 2 படம் பார்த்தேன். உண்மையில் படம் நன்றாக இருக்கிறது. பிரியா பவானி சங்கர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார். தயவுசெய்து இயக்குனர்கள் அவருக்கு மாயா, இதுவும்கடந்துபோகும் போன்ற கதாநாயகிகளை மையமாக வைத்து திரைப்படங்களை வழங்குங்கள்” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” டிமான்டி காலனி 2 படம் மிகவும் நன்றாக இருக்கிறது. திரைக்கதையில் அஜய் ஞானமுத்து ருத்ரதாண்டவம் விளையாடியுள்ளார். சரியான கம்பேக் இந்த படத்தின் மூலம் கொடுத்துள்ளார்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay