ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம்: காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையம்!
நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படியான வீடியோ வெளியானவுடன் ராஷ்மிகா வேதனையுடன் இனிமேல் இது போன்று யாருக்கும் நடக்கவே கூடாது தொழில் நுட்பம் மிகவும் ஆபத்தமாக மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
ராஷ்மிகா குறித்து இப்படியான போலி வீடியோவை எடிட் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தக்க நடவடிக்கை கொடுக்க வேண்டும் எனவும் அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், நாகசைத்னயா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.
ராஷ்மிகா போலி வீடியோ சர்ச்சை: 3 ஆண்டுகள் சிறை.! மத்திய அரசு எச்சரிக்கை.!
இந்த நிலையில், ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இந்த மாதிரி போலி வீடியோவை வெளியிட்டவர் மீது நிச்சியமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உடனடியாக இந்த விவகாரத்தை பற்றி டெல்லி காவல்துறையினர் விசாரணையை நடத்தவேண்டும் என்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் காவல்துறைக்கு கோரிக்கை வைத்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், ராஷ்மிகா மந்தனா குறித்த இப்படி தவறான மார்பீங் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து. அதன்படி , இனிமேல் இதுபோன்ற போலியான வீடியோக்களை வெளியீட்டால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.