“பேசாம படத்தை டெலிட் பண்ணுங்க”..விடாமுயற்சியால் நொந்துபோன ரசிகர்கள்..வைரலாகும் மீம்ஸ்!
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றுள்ள நிலையில், ரசிகர்கள் மீம்ஸ் செய்து வருகிறார்கள்.
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது தான். கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் அஜித்தின் துணிவு படம் வெளியானது. எனவே, ஒரு வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அஜித் படம் வரவில்லை என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஒரு வழியாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை மட்டும் படக்குழு அறிவித்திருந்தது என்பதால் படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில், விடாமுயற்சி படம் ரிலீஸ் தேதி தள்ளி செல்வதாக லைக்கா நிறுவனம் இரவு 12 மணிக்கு அறிவித்தது.
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் என்னதான் பிரச்னை? எதற்காக இப்படி எங்களை கோபமடைய செய்கிறீர்கள் என்கிற அளவுக்கு வேதனை அடைந்து மீம்ஸ் செய்து வருகிறார்கள். எனவே, விடாமுயற்சி பற்றி மீம்ஸ் பற்றி பார்ப்போம்.
ஒருவர் விடாமுயற்சி ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து படத்தையே டெலிட் பண்ணுங்க என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இன்னோருவர் விஜய் 69 படம் ரிலீஸ் பண்ணதுக்கு அப்புறம் தான் விடாமுயற்சி ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என கலாய்த்துள்ளார்.