தள்ளி வைக்கப்படும் தளபதி 69! காரணம் என்ன?
தளபதி 69 : விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 69’ படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த நிலையில், அக்டோபர் மாதத்திற்கு தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் விஜய்க்கு 68-வது திரைப்படம் இந்த படத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபட இருக்கிறார். விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் மட்டுமே வெளியான நிலையில், இன்னும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
முன்னதாக, தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி நடைபெறும் என கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஆக்டோபர் மாதம் தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏனென்றால், கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் வேளைகளில் ஈடுபட இருக்கிறாராம். ஏற்கனவே, விஜய் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மாநாடு நடத்தவேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும். எனவே, அதற்காக விஜய் தற்போது காத்து இருக்கிறாராம்.
மாநாடு நடத்திவிட்டு சில மாதங்கள் அரசியல் வேளைகளில் ஈடுபட்டுவிட்டு அதன் பிறகு அக்டோபர் மாதம் தன்னுடைய 69-வது படத்திற்கான படப்பிடிப்பில் இணைய திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், விஜய் நடித்து இருக்கும் கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.