Deepika Padukone: பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரும் இன்று (பிப்ரவரி 29) தங்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் வகையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், இந்த ஆண்டு செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நற்செய்தியை அறிவித்ததும், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர், மாதுரி தீட்சித், நீனா குப்தா, மசாபா குப்தா, விக்ராந்த் மாஸ்ஸி, மீரா ராஜ்புத், நேஹா துபியா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பல பிரபலங்களின் வாழ்த்துச் செய்திகளை குவித்து வருகின்றனர்.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இருவரும் சந்திக்கொண்டனர். அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், ஐந்து வருடங்கள் டேட்டிங் செய்த பின், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இப்பொது, அவர்கள் இருவரும் இந்த ஆண்டு பெற்றோர்களாக போகிறார்கள்.
தீபிகா படுகோன் கடைசியாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய ‘ஃபைட்டர்’ படத்தில் நடித்திருந்தார். இதை தவிர, ‘கல்கி 2898’ எடி, ‘சிங்கம் எகைன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…