பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ மற்றும் ‘பதான்’ ஆகிய திரைப்படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி உள்ளது. ஒரே ஆண்டில் ஒரு நடிகரின் 2 படங்கள் வெளியாகி இரண்டு படமும் 1,000 கோடி வசூல் செய்த சாதனையையும் அவர் படைத்தது இருக்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா போலீசாருக்கு வந்த தகவலின் படி ஷாருக்கானுக்கு கொலைமிரட்டல் வந்துள்ளதாம். ஜவான், பதான் வெற்றியால் அவருக்கு இந்த கொலைமிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷாருக்கானின் பாதுகாப்பாக 3 போலீசார் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிர மாநில அரசு Y+ பாதுகாப்பு அவருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக ஷாருக்கான் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு தற்போது Y+ பாதுகாப்பு வழங்கி மகாராஷ்டிர மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த Y+ பாதுகாப்பு 24 மணி நேரமும் ஷாருக்கான் வீட்டில் போலீஸார் ஆயுதம் வைத்து கொண்டு இருப்பார்கள். கிட்டத்தட்ட 6 போலீசார் பாதுகாப்பிற்காக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்த Y+ பாதுகாப்பிற்கு எவ்வளவு கட்டணமோ அதனை ஷாருக்கான் செலுத்துகிறார். மேலும்,ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு Y+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் கொடுத்துள்ள கொலை மிரட்டல் காரணமாக அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…