பிரபல ஹாலிவுட் நடிகரான சாம் லாய்ட் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகரான சாம் லாய்ட், ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், படங்களில் மட்டுமல்லாது, கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள் இவரை பரிசோதித்த போது, இவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி சாம் லாய்ட் (56) உயிர் பிரிந்துள்ளது.
இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சினிமா பிரபலங்களான இப்ரான் கான் மற்றும் ரிஷி கபூர் போன்ற பிரபலங்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…