நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் விபத்து அல்ல! கொலை : கேரள டிஜிபி
நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் அதிகமாக போதை பொருள் பயன்படுத்தியதால், தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஆராய்வதற்காக, கேரள டிஜிபி, தடவியல் நிபுணரான உமாடாதனை நாடியுள்ளார்.
இந்நிலையில், தடவியல் நிபுணர் டாக்டர் உமாடாதன் கூறியதை கேரளா டிஜிபி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஸ்ரீதேவியின் மரணம் ஒரு விபத்து அல்ல என தடவியல் நிபுணர் கூறியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகை ஸ்ரீதேவி குடித்து விட்டு, குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது என்றும், அப்படியே அவர் அதிகமாக குடித்திருந்தாலும், ஒரு அடி உயர தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது என்றும், வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்தும் தள்ளினால் தவிர, அவர் மூழ்குவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ஸ்ரீதேவியின் மரணம் மர்மமானதாகவே முடிந்து விட்டதாக கூறியுள்ளார் கேரள டிஜிபி.