இன்னும் ரிலீஸ் கூட ஆகாத விஜய் தேவர்கொண்டா படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ள முன்னனி இயக்குனர்!
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுவதும் நன்கு தெரிந்த நடிகராகவும், அதிக ரசிகர்களையும் பெற்றுள்ள நடிகர் விஜய் தேவ்ராகொண்டா. இவர் நடிப்பில் அடுத்ததாக டியர் கம்ரேட் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதில் ரஷ்மிகா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரீமியர் கட்சியை பார்த்த பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் பார்த்துள்ளார். அந்த படம் பிடித்ததால், ஹிந்தியில் தானே ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளாராம். இவர் பாலிவுட்டில் மை நேம் இஸ் கான், ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என பல படங்களை இயக்கியுள்ளார்.